business

img

பொதுமுடக்கத்தில் அத்தியாவசியம் அல்லாத பொருட்கள் விற்பனைக்கு தடை.... உற்பத்தியை நிறுத்திய எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள்....

புதுதில்லி:

இந்தியாவில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருள் (ஹோம் அப்லையன்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை ஏறக்குறைய மூடி விட்டதாக அறிவித்துள்ளன. 

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் அல்லாதவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும், அதுபோன்ற கடைகளை மூட வேண்டும் என்றும் பல்வேறு அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இதனால் ஹோம் அப்லையன்ஸ் மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவற்றின் விற்பனை ‘ஜீரோ’ என்ற அளவிற்கு, இறங்கி விட்டது.

இதன்காரணமாகவே ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை மூடி விட்டதாக அண்மையில் அறிவித்துள்ளன.எல்ஜி, பானாசோனிக், கேரியர் மீடியா, விவோ, ஓப்போ, ஹேயர், காட்ரிஜ் ஆகிய நிறுவனங்கள் 80 முதல் 90 சதவிகிதம் வரை உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதேபோல் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் ஆகியவையும் 25 முதல் 40 சதவிகிதம் வரை உற்பத்தியைக் குறைத்துள்ளன. குறிப்பாக, சாம்சங் வாரத்தில் 3 நாட்கள் தனது தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலையிழப்புக்கும் உள்ளாகியுள்ளனர். 

;